Monday, 17 June 2019

எல்லாம் இயேசுவே!

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34:1


இந்த இனையதளம் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவைப் போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட  இணையதளம் ஆகும். ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவைப் போற்றும் விதமாக வசனங்கள், பாடல் வரிகள் மற்றும் வீடியோக்கள் இடம் பெறுகின்றன. நீங்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி ஆண்டவரை மகிமைப் படுத்தும் படியாக உங்களை  அன்புடன் அழைக்கிறேன்.  கிறிஸ்துவே உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென்!








பாடல்-1

நீங்க மட்டுமில்லேனா, 
எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன்;
மண்ணுக்குள்ள போயிருப்பேன் மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார் 
நீங்க மட்டுமில்லேனா!!!!!!


 நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும்,
 ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே
 எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன்
 நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே 
- நீங்க மட்டுமில்லேனா 

 எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள்
 சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல
 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்
 நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் -
 நீங்க மட்டுமில்லேனா

 ... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு
 ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை 
எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை 
தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை 
- நீங்க மட்டுமில்லேனா ...




---------------------------------------------------------------------------------------------------------------

பாடல்-2

உம் அழகான கண்கள்

Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. Ontumillatha ennai um Kaarunyaththaalae Uyarththi vaiththa nalla naesarae ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே

-----------------------------------------------------------------------------------------


என்மீது அன்புகூா்ந்து

என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிரக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா் கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா் மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா் வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே 4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே


--------------------------------------------------------------------------------------


துயரத்தில் கூப்பிட்டேன்


1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா - (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் - (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் - (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை - (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானையா - (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானையா - (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2) 4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் - (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2) புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------




மறவாமல் நினைத்தீரையா


மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை நடத்தினீரே இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை நடத்தினீரே மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே---2 எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன்--2 நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா---2 மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா---2 சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே---2 நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா--2 மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே-2 சோர்ந்து போன நேர மெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே---2 நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா--2 மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீர்- என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம் எடுக்கச் செய்தீர்--2 நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......கோடி கோடி நன்றி ஐயா--2 மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் என்னை மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை உதவினீரே இரவும் பகலும் எனை நினைந்துஇதுவரை நடத்தினீரே


--------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 1. உவர் நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2. தனி மரமாக இருந்த என்னை கனி மரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும் தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

------------------------------------------------------------------------------------------------------------------------------------


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2 ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்க விடாதேயும்—2 எதிரியின் கை ஓங்க விடாதேயும்—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்—2 -முழு இதயத்தோடு


---------------------------------------------------------------------------------------------------------------------------------------